
கெடா, செப்டம்பர் 12 – நேற்றிரவு கெடா யான் மாவட்டத்திலுள்ள தாமன் நோனா பகுதியில் ஆண் பெண் இருவரும் கத்தி குத்துக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
உயிரிழந்த அப்பெண் புரோட்டோன் வீரா காரில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்வீட்டின் முன்புறமிருந்த சாலையில் கத்தி குத்துக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரும் கண்டுபிடிக்கப்பட்டார்.
இருவரும் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டிருக்கலாம் எனவும் அக்கொலை சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் யான் மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரி முகமட் ஹமிசி அப்துல்லா (Mohd Hamizi Abdullah) தெரிவித்தார்.
மரணமடைந்த ஆண் யான் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், பெண் சுங்கை பட்டாணி பகுதியைச் சேர்ந்தவர் என்றும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் இவ்வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று அறியப்படுகின்றது.
இந்நிலையில் இருவரின் உடல்களும் அலோர் ஸ்தார் மருத்துவமனை (HSB) உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.