
பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 12 – இன்று அதிகாலை பெட்டாலிங் ஜெயா நெடுஞ்சாலையில், நால்வர் பயணித்த வாகனம் வேகக் கட்டுப்பாட்டை மீறி சென்றதால் ஏற்பட்ட விபத்தில் மூவர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் ஒருவருக்கு மட்டும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
தகவல் கிடைத்த ஐந்து நிமிடங்களிலேயே சம்பவ இடத்திற்கு விரைந்த பெட்டாலிங் ஜெயா தீயணைப்பு குழுவினர் உடனடியாக மீட்பு பணி வேளைகளில் ஈடுபட்டனர்.
காயமடைந்தவர்களில் இருவர் மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்திற்கு (PPUM) அனுப்பப்பட்ட நிலையில் மற்ற அனைவரும் சுகாதார அமைச்சு (KKM) அதிகாரிகளிடம் மேல் சிகிச்சைக்காக ஒப்படைக்கப்பட்டனர்.