Latestமலேசியா

பகடி வதை, மற்றும் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலினால் பள்ளிக்கு செல்வதில் 15 வயது மாணவன் அச்சம்

 

கோலாலம்பூர், அக்டோபர்- 27,

பிப்ரவரி மாதம் பள்ளியில் சேர்ந்த முதல் நாளிலிருந்தே பகடிவதை கொடுமை, மற்றும் மிரட்டி பணம் பறிக்கும் மாணவர் கும்பலிடம் பள்ளிக்கு கொண்டு செல்லும் கட்டணத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தினால் பள்ளிக்கு செல்வதில் அச்சத்திற்கு உள்ளாகியிருப்பதாக டமன்சாராவிலுள்ள 15 வயது பள்ளி மாணவன் கூறியுள்ளான். தனது பாதுகாப்புக்காக அந்த மாணவனின் பெயர் வெளியிடப்படவில்லை. மற்ற மாணவர்களையும் அந்த கும்பல் மிரட்டி பணம் பறித்து வருவதாகவும் , அவர்களின் நடவடிக்கையை தாங்களும் அறிந்துள்ளதாக இதர மாணவர்கள் கூறியிருக்கும் தகவலையும் பாதிக்கப்பட்ட பதின்மவயது மாணவன் தெரிவித்துள்ளான்.

அந்த மாணவனின் கைகளில் காயங்களைக் கண்ட நான்கு நாட்களுக்குப் பிறகு அவனது தந்தை போலீசில் புகார் செய்தததோடு இது குறித்த விசாரணையை தீவிரப்படுத்தும்படி போலீஸிற்கு கோரிக்கை விடுத்துள்ளார். விசாரணை அறிக்கை அடுத்த வாரம் சிலாங்கூர் அரசாங்க தரப்பு துணை வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்படும் என தனது பெயரை குறிப்பிட விரும்பாத டமன்சாரா போலீஸ் நிலையத்தின் விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!