
புத்ராஜெயா, செப்டம்பர்-23,
சேதமடைந்த MyKad அடையாள அட்டைகளின் சில்லுகளை (chips) இலவசமாக மாற்றி கொடுக்கும் திட்டத்தை, உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இது, இன்று செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 7 வரை நாடு முழுவதும் நடைபெறும்.
இலக்கிடப்பட்ட Budi95 மானியங்கள் மக்கள் பெறுவதில் இடையூறு ஏற்படாமல் இருப்பதே இம்முயற்சியின் நோக்கமென, அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் கூறினார்.
MyKad சில்லுகள் சேதமடைந்ததாகக் கூறி, இவ்வாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை சுமார் 2 லட்சத்து 95 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக அவர் சொன்னார்.
இந்த இரு வார கால திட்டத்திற்கு சுமார் RM715,000 செலவாகும் என மதிப்பிடப்படுகிறது; அதை முழுமையாக அரசு ஏற்கிறது.
MyKad என்பது வெறும் அடையாள அட்டை மட்டுமல்ல, அரசாங்கத்தின் பல்வேறு சேவைகள் மற்றும் மானியங்களுக்கான திறவுகோல் என்றும் சைஃபுடின் நினைவூட்டினார்.