மனிதாபிமான உதவிப் பொருட்கள் கொண்டுச் சென்ற கப்பல்களை இடைமறித்த இஸ்ரேல் நடவடிக்கையை பிரதமர் சாடினார்

கோலாலம்பூர், அக்டோபர்- 8,
காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காகச் சென்ற மனிதாபிமானப் பணிக் கப்பல்களான Freedom Flotilla Coalition (FFC ) மற்றும் Thousand Madleens to Gaza ஆகியவற்றை இஸ்ரேல் இடைமறித்ததற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடும் கண்டனம் தெரிவித்தார். காசா மக்களுக்கான உதவிகளை ஏற்றிச் சென்ற மனிதாபிமானப் பணிக் கப்பல்களை இடைமறித்த நடவடிக்கை மனிதாபிமானமற்றது என்பதோடு , மனித உரிமைகள் மற்றும் உலகளாவிய மனித கண்ணியத்தின் அடிப்படைக் கொள்கைகளை இஸ்ரேல் மீறியிருப்பதாகவும் பிரதமர் முகநூல் பதிவில் சுட்டிக்காட்டினார்.
மலேசியர்களை ஏற்றிச் சென்ற மனிதாபிமானப் பணிக் கப்பல் FFC-TMTG, மலேசிய நேரப்படி காலை 10.50 மணியளவில் இஸ்ரேலிய யூத ராணுவத்தால் அனைத்துலக கடல் பகுதியில் சட்டவிரோதமாக இடைமறிக்கப்பட்டதாக தனக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் இந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கையையும் அனைத்துலக சட்ட மீறலையும் தாம் கடுமையாக கண்டிப்பதாக அன்வார் தெரிவித்தார்.
இதனிடையே Freedom Flotilla Coalition மற்றும்Thousan Madleens to Gaza வுக்கான மனிதாபிமான நடவடிக்கையில் பங்கேற்ற 9 மலேசியர்கள் இஸ்ரேல் ராணுவம் தடுத்துவைக்கப்பட்டுள்ளதால் அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அன்வார் கோரிக்கை விடுத்தார். அந்த தன்னார்வ குழுவின் தலைவர் நிறைநிலை பேராசிரியர் டாக்டர் Mohd Alauddin Mohd Ali யுடன் , Dr Fauziah Hassan, Dr Hafiz Sulaiman,Dr Ili Syakira Mohd Suhaimi, நிருபர் Syafik Shukri Abdul Jalil, பல்கலைக்கழகத்தின் இரண்டு விரிவுரையாளர்களான பேராசிரியர் .
Dr Mohd Afandi Salleh, Dr Noorhasyimah Ismail, மற்றும் MYCARE அறவாரிய உறுப்பினர் Norsham Abu Bakarரும் தடுத்துவைக்கப்பட்டவர்களில் அடங்குவார். மருத்துவ நிபுணர் டாக்டர் Maziah Mohammad TMTG க்கு சொந்தமான Umm Saad கப்பலில் பயணம் செய்துள்ளார்.
தடுத்துவைக்கப்பட்ட அனைத்து மலேசிய தன்னார்வாளர்களும், தொண்டூழியர்களும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்பதோடு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் வேளையில் அவர்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அன்வார் கேட்டுக்கொண்டார். இந்த மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டுள்ள மலேசியர்களின் ஒவ்வொரு உயிரையும் பாதுகாக்க Madani அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும், மேலும் அவர்களின் விடுதலையை விரைவில் எளிதாக்க நட்பு நாடுகள் மற்றும் அனைத்துலக அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளும் என்றும் அவர் வலியுறுத்தினார்.