
ஜோர்ஜ்டவுன், அக்டோபர் -12,
பண்டிகை கால குதூகலத்தை பேறு குறைந்தவர்களுடன் பகிர்ந்துகொள்வதில் கிடைக்கும் சந்தோஷமும் திருப்தியுமே தனி தான்.
அதனடிப்படையில் இரண்டாவது ஆண்டாக பேறு குறைந்த குழந்தைகளுக்கு தீபாவளி துணிமணிகள் எடுத்துக் கொடுத்து விருந்துபசரித்து மகிழ்ந்துள்ளார், பினாங்கு ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர்.
இவ்வாண்டு ராமகிருஷ்ணா ஆசிரக் குழந்தைக 50 பேரை தீபாவளி ஷாப்பிங் அழைத்துச் சென்ற ராயர், அவர்களுக்கு வேண்டிய புத்தாடைகளை அவர்களே மகிழ்ச்சியுடன் தேர்ந்தெடுத்ததை கண்டு அகம் மகிழ்ந்தார்.
பினாங்கு முன்னாள் முதல்வரும் DAP ஆலோசகருமான லிம் குவான் எங்கும் அதில் கலந்துகொண்டார்.
ஷாப்பிங் முடிந்து, ஜெயா கேட்டரிங் உணவகத்தில் குழந்தைகளுக்கு தீபாவளி விருந்தும் பரிமாறப்பட்டது.
குழந்தைகளின் முகத்தில் கண்ட தீபாவளி மகிழ்ச்சி தமக்கு ஆத்ம திருப்தியை அளிப்பதாக ராயர் கூறினார்.