அன்பின் ஒளி, AI வழி, உங்கள் இல்லங்களில் நிலைக்கட்டும் – கோபிந்த் சிங்-கின் தீபாவளி வாழ்த்து

கோலாலாம்பூர், அக்டோபர்-17,
அறிவின் ஒளியும், இலக்கவியல் திறனும் நம் சமூகத்தை மேலும் வலுப்படுத்தட்டும் என, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மலேசிய இந்துக்களுக்கு வழங்கிய தமது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீபாவளி ஒற்றுமை, அறிவு, முன்னேற்றம் ஆகியவற்றின் வழியில் நம்மை ஒன்றிணைக்கட்டும் என்றார் அவர்.
மடானி அரசாங்கத்தின் கீழ் இந்தியர்களின் நலன் காக்கப்படும்; நாட்டின் தூர நோக்குத் திட்டத்தில் இந்தியர்களையும் மடானி அரசாங்கம் அரவணைத்துச் செல்லும். மித்ரா மற்றும் கோவில்கள் மட்டுமின்றி, பிற மேம்பாட்டுத் திட்டங்களையும் இந்தியர்களுக்காக இந்த ஒற்றுமை அரசாங்கம் வழங்கி வருவதை கோபிந்த் சுட்டிக் காட்டினார்.
தமிழ் பாலர் பள்ளி, தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாடு, இந்திய வணிகர்களுக்கான பிரத்தியேக உருமாற்றுத் திட்டங்கள், இளைஞர்களுக்காக சிறப்பு திறன் பயிற்சி திட்டங்கள் என சமூக நல மேம்பாட்டுத் திட்டங்களையும் மடானி அரசு செயல்படுத்தி வருகிறது.
கல்வியிலும் வணிகத்திலும் மட்டுமின்றி, இந்திய இளைஞர்கள் இலக்கவியல் (Digital) துறையிலும் தங்களை முன்னேற்றிக் கொண்டு, புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு, புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றனர்.
இது நம் சமூகத்தின் சிந்தனை மாற்றத்தையும், அறிவு வளர்ச்சியையும் பிரதிபலிக்கிறது.
இந்நிலையில், இந்த தீபாவளிக்கு அன்பின் ஒளி, AI வழி, உங்கள் இல்லங்களில் நிலைக்கட்டும் என கோபிந்த் வாழ்த்தினார்.