
காஜாங், அக்டோபர்-29,
காஜாங்கில் 40 வயது ஆடவர் ஒருவர், தனது 17 வயது முன்னாள் காதலியின் அந்தரங்கப் புகைப்படங்களை வாட்சப்பில் பகிர்ந்த சந்தேகத்தில் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
தனது தனிப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருவதை அறிந்து அதிர்ச்சியடைந்ததாக, பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததைத் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
சந்தேக நபர் பழிவாங்கும் நோக்கில் அவ்வாறு செய்ததாக நம்பப்படுகிறது.
தற்போது காவலில் வைக்கப்பட்டு அந்நபர் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
ஒருவரின் சம்மதமின்றி அவரின் தனிப்பட்ட புகைப்படங்களை பகிர்வது கடுமையான குற்றமாகும்; இது சிறைத்தண்டனைக்கும் வழிவகுக்கும்.
இந்நிலையில், இதுபோன்ற தொல்லை அல்லது மிரட்டலுக்கு உள்ளாகும் யாரும் உடனடியாக போலீஸில் புகார் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.



