Latestஉலகம்சிங்கப்பூர்
சிங்கப்பூர் மெரினா பே சண்ட்ஸ் 55 ஆவது மாடியில் தீ

சிங்கப்பூர், அக்டோபர்- 29
சிங்கப்பூரில் மெரினா பே சாண்ட்ஸில்
( Marina Bay Sands ) தீ விபத்து ஏற்பட்டது. அந்த ஹோட்டலின் 55வது மாடியில் ஒரு பிளாஸ்டிக் பாய் தீப்பிடித்ததாக சிங்கப்பூர் சிவில் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்துள்ளது. SCDF பணியாளர்கள் வருவதற்கு முன்பு ஒரு ஊழியர் தீயை அணைத்ததாக சிங்கப்பூர் மெரி9னா பே சாண்ட்ஸின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். MBS ஹோட்டல் டவர் 3 இல் பிற்பகல் 3.30 மணியளவில் தீ தொடங்கியது.
அந்த ஹோட்டலில் தங்கியிருந்த விருந்தினர்களால் அணுக முடியாத இடத்தில் தீ விபத்து ஏற்பட்டதோடு , சிங்கப்பூர் தற்காப்பு படை உறுப்பினர்கள் வருவதற்கு முன்னதாகவே ஒரு உறுப்பினரால் விரைவாக தீ அணைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் எவரும் காயம் அடையவில்லை. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.



