Latest

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ட்ரம்ப் – சின் பிங் சந்திப்பு; சீனாவுக்கான வரி விதிப்பு 10% குறைப்பு

பெய்ஜிங், அக்டோபர்-31,

சீன பொருட்களுக்கான இறக்குமதி வரி 57 விழுக்காட்டிலிருந்து 47 விழுக்காட்டுக்குக் குறைக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

6 ஆண்டுகளுக்குப் பிறகு சீன அதிபர் சீ சின் பிங்கை நேரில் சந்தித்தப் பிறகு ட்டிரம்ப் அவ்வாறு கூறினார்.

ஆசியப் பசிஃபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பான APEC மாநாட்டில் பங்கேற்பதற்காக தென் கொரியா சென்றுள்ள அவ்விரு தலைவர்களும் முன்னதாக சந்திப்பு நடத்தினர்.

அமெரிக்காவும் சீனாவும் மாதக் கணக்கில் பரஸ்பர வரிப் போரில் ஈடுபட்டிருந்த நிலையில், 1 மணி நேரம் 40 நிமிடங்கள் நீடித்த இன்றையச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

அந்த 10 விழுக்காடு வரிக் குறைப்புக்கு ஏதுவாக, சீனாவும் உடனடியாக அமெரிக்காவிலிருந்து சோயாபீன்ஸ் கச்சான்களை வாங்கத் தொடங்கும்.

அதே சமயம், மிகப் பெரிய முட்டுக் கட்டையாக இருந்த அரிய வகை தாதுப் பொருட்கள் ஏற்றுமதி பிரச்னையும் தீர்க்கப்பட்டுள்ளது; இனி சீனா எந்தத் தடையுமின்றி அமெரிக்காவுக்கு அதனை ஏற்றுமதி செய்யும்.

இன்றைய சந்திப்பு வெற்றிகரமாகவும் பயனுள்ளதாகவும் இருந்ததாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், நீண்ட காலத்திற்கு அவ்வுறவை நிலைத்திருக்கச் செய்யப் போகிறோம் என்றார்.

அவ்வகையில் சீனாவுடன் மேலும் பேச்சு நடத்த அடுத்தாண்டு ஏப்ரலில் அவர் பெய்ஜிங் செல்கிறார்.

இவ்வேளையில், அமெரிக்காவும் சீனாவும் இணைந்து செயல்பட்டால் பலவற்றை சாதிக்க முடியும். இரு வல்லரசு நாடுகளுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்புதான், அது எப்போது வேண்டுமானாலும் தீர்ந்துகொள்ளலாம் என சீ சின் பிங் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!