
கோலாலம்பூர்,நவ 5-,
இந்தோனேசியாவில் வடகிழக்கு கலிமந்தான் நகரமான
தாராக்கானில் ( Tarakan) ரெக்டர் கருவியில் 4.8 அளவில் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சபாவின் தென் பகுதியிலும் நில அதிர்வை உணர முடிந்ததாக மெட்மலேசியா எனப்படும் மலேசிய வானிலைத்துறை தெரிவித்துள்ளது.
சபாவின் Sapulut டிலிருந்து 227 கிலோமீட்டர் தொலைவில் நேற்று மாலை மணி
6.37 அளவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலைத் துறை தெரிவித்தது.
நில நடுக்கத்தின் அதிர்வை சபாவின் தென்பகுதியில்
உணரமுடிந்தது.
நிலைமையை வானிலைத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இந்த நிலநடுக்கத்தினால் நாட்டில் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லையென்று
அறிவிக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்டு மாதத்திலிருந்து ஜோகூரில் பல இடங்களில் சிறிய அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது.
ஆகக்கடைசியாக இரண்டு நாட்களுக்கு
முன் சிகமாட் வட்டாரத்தில் ரெக்டர் கருவியில் 2.7 அளவில் பதிவான நிலநடுக்கம் உலுக்கியது.



