Latest

ஸ்ரீ கெம்பாங்கானில் இந்திய இளம்பெண் படுகொலை 5ஆவது சந்தேகப் பேர்வழி கைது

கோலாலம்பூர், நவ 7 -சிலாங்கூர்,ஸ்ரீ கெம்பாங்கானில் இந்திய இளம் பெண் ஒருவர் படுகொலை தொடர்பில் 5ஆவது சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டதாக செர்டாங் போலீஸ் தலைவர் Farid Ahmad உறுதிப்படுத்தினார்.

விற்பனையாளராக பணியாற்றி வந்த அந்த பெண்ணின் கைகள் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணக் கோலத்தில் ஸ்ரீ கெம்பாங்கானில் இறந்து கிடக்கக் கண்டுப்பிடிக்கப்பட்டார்.

விசாரணைக்கு உதவும் பொருட்டு இம்மாதம் 10ஆம்தேதிவரை அந்த சந்தேகப் பேர்வழி தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.

இதற்கு முன் கைதான இதர மூன்று சந்தேகப் பேர்வழிகளுக்கு எதிரான தடுத்து வைக்கும் உத்தரவு மேலும் மூன்று நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதையும் Farid Ahmad தெரிவித்தார்.

அந்த மூன்று ஆடவர்களுடன் நான்காவது சந்தேகப் பேர்வவழியாக கைது செய்யப்பட்ட பெண் ஐந்து நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தோடு அவரது தடுப்புக் காவல் சனிக்கிழமைவரை மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

24 வயதுடைய அந்த பெண் ஸ்ரீ கெம்பாங்கான் Blue Water Estate சாலை சுற்றுவட்டத்திற்கு அருகே அக்டோபர் 30ஆம் தேதி இறந்த கிடக்கக் காணப்பட்டதை தொடர்ந்து மறுநாள் அந்த பெண்ணின் முன்னாள் காதலன் ,அப்பெண்ணின் வளர்ப்பு சகோதரர் மற்றும் அப்பெண்ணின் வீட்டில் தங்கியிருந்த பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!