
புத்ரா ஜெயா , நவ 7 – நாட்டில் வேலை செய்ய அல்லது வணிகம் செய்ய PLS எனப்படும் சமூக வருகை அனுமதி பாஸ அல்லது சீட்டை (PLS) தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அரசாங்கம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
சமூக வருகை பாஸை பயன்படுத்துவது தொடர்பான சட்டத்தை மீறும் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக கடுமையான அமலக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ பாமி பாட்ஸில் தெரிவித்தார்.
இந்த அனுமதிச் சீட்டை தவறாகப் பயன்படுத்துவது தொடர்பான தகவல்களைத் தொடர்ந்து, சமூக வருகை பாஸை பயன்படுத்தும் சுற்றுலாப் பயணிகளுக்கு அமைச்சரவை பரிசீலனை செய்து எச்சரிக்கை விடுக்க முடிவு செய்துள்ளது.
சட்டத்தை மீறும் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக கடுமையான அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாரந்திர செய்தியாளர் கூட்டத்தில் பாமி கூறினார்.
இந்த நாட்டில் எந்தவொரு தொழிற்துறையிலும் சமூக வருகை பாஸ் வைத்திருப்பவர்கள் எந்தவொரு வேலைவாய்ப்பு அல்லது வணிக நடவடிக்கைகளிலும் ஈடுபட அனுமதிக்கப்படவில்லை



