Latest
சிங்கப்பூர் அரசு அதிகாரிகளாக நடித்து ஏமாற்றிய மலேசியர்கள், RM1.44 மில்லியன் தங்க மோசடியில் கைது

சிங்கப்பூர், நவம்பர் 11 – அரசு அதிகாரிகளைப் போல நடித்து பெண் ஒருவரை ஏமாற்றி 412,000 சிங்கப்பூர் டாலர் மதிப்பிலான தங்கத்தை வற்புறுத்தி வாங்கச் செய்த இரு மலேசியர்கள் சிங்கப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அச்சந்தேக நபர்கள், நவம்பர் 7 ஆம் தேதியன்று சட்ட அமைச்சு மற்றும் சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS) அதிகாரிகள் என தங்களைக் காட்டிக் கொண்டு அப்பெண்ணை ஏமாற்றியுள்ளனர்.
மோசடிகாரர்கள் புலனத்தின் வாயிலாக போலியான ஆவணங்களை அனுப்பி, வங்கிக் கணக்கிலிருந்து பணம் மாற்றவும், பின்னர் தங்கம் வாங்கச் செய்துள்ளனர்.
இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 500,000 சிங்கப்பூர் டாலர் அபராதம் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.



