
ஷா ஆலாம், நவம்பர் 11 – இந்திய நாட்டு பிரஜையைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு நபர்கள், போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அறுவரும், முக்கிய சந்தேக நபருடன் ஒரே வீட்டில் வசிப்பவர்கள் என்று சிலாங்கூர் மாநில காவல் துறை தலைவர் டத்தோ ஷசெலி கஹார் (Datuk Shazeli Kahar) தெரிவித்தார்.
அவர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற்று விட்ட பின்னர், விசாரணைக்கு தேவையான புதிய தகவல் எதுவும் கிடைக்கப் பெறாததால், அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொலைக்கான உண்மையான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளதாகவும், வழக்கின் முன்னேற்றங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, செர்டாங் மாவட்ட காவல் துறை தலைவர் முகமட் பாரிட் அகமட் (Muhamad Farid Ahmad) கூறுகையில், கடந்த 19 ஆண்டுகளாக மலேசியாவில் வசித்து வந்த 49 வயது மதிக்கத்தக்க இந்திய நாட்டு தொழில்நுட்ப நிபுணர் ஒருவர் நவம்பர் 6ஆம் தேதி பூச்சோங்கில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.



