
மாராங், டிசம்பர்-9 – திரங்கானு, மாராங்கில் மாற்றுத் திறனாளி ஆண் மாணவர்கள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் பள்ளித் தங்கும் விடுதியில் நடந்ததாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நவம்பர் 17-ஆம் தேதி நிகழ்ந்த முதல் சம்பவத்தில் கற்றல் குறைபாடு கொண்ட 17 வயது மாணவனை, 16 வயது பையன் ஓரினப் புணர்ச்சிக்கு உட்படுத்த முயன்றுள்ளான்.
நவம்பர் 20-ஆம் தேதி நிகழ்ந்த இரண்டாவது சம்பவத்தில், கவனப் பற்றாக்குறையால் அதீத செயல்பாடு கொண்ட 13 வயது சிறுவனும் இன்னொரு 16 வயது பையனால் ஓரினப் புணர்ச்சிக்குக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளான்.
இரு சந்தேக நபர்கள் குறித்தும் தங்கும் விடுதி வார்டன் போலீஸில் புகார் செய்ததை அடுத்து இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
எனினும் இதுவரை யாரும் கைதுச் செய்யப்படவில்லை.
விசாரணைகள் தொடருவதாக மாராங் போலீஸ் கூறியது.



