லியோனல் மெசியின் வருகையால் களைக்கட்டும் கொல்கத்தா; 70 அடியில் உலகின் உயரமான மெசி சிலை திறப்பு

கொல்கத்தா, டிசம்பர்-13, இந்தியா கொல்கத்தாவில் 70 அடியில் உலகின் மிக உயரமான லியோனல் மெசியின் சிலை நிறுவப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற அந்தக் கால்பந்து நட்சத்திரத்தின் GOAT Tour இந்திய வருகையை முன்னிட்டு, கால்பந்து இரசிகர்களின் உற்சாகத்தை பிரதிபலிக்கும் வகையில் இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா, இந்தியாவின் கால்பந்து தலைநகரம் என அழைக்கப்படும் நிலையில், இந்த சிலை நகரின் பெருமையை உலகளவில் வெளிப்படுத்துகிறது.
3-நாள் பயணமாக இன்று இந்தியா வரும் மெசிக்கு, Z-வகை உயரியப் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.
கொல்கத்தா மட்டுமின்றி, ஹைதராபாத், மும்பை, டெல்லி ஆகிய மாநகரங்களுக்கும் மெசி செல்கிறார்.
மாநில முதல்வர்கள் முதல் போலிவூட் பிரபலங்கள் வரை சந்திக்கும் மெசி, கடைசியாக பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்கிறார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோடுவுக்கு ஈடாக இந்தியாவில் மெசிக்கு பெரும் இரசிகர் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது.



