
பெசூட், டிசம்பர்-16 – திரங்கானு பெசூட்டில், 44 வயது ஆசிரியை ஒருவர் போலி கைப்பேசி அழைப்பை உண்மையென நம்பி RM325,800 பணத்தை இழந்துள்ளார்.
அவரைத் தொலைபேசியில் அழைத்த மோசடி கும்பல், தங்களை National Scam Response Centre அதிகாரிகள் எனக் கூறிக் கொண்டதோடு, பணமோசடி வழக்கில் அவர் சிக்கியுள்ளதாகவும் அச்சுறுத்தியது.
இதனால் பயந்தபோன அம்மாது, ‘அதிலிருந்து தப்பிக்க’, நவம்பர் 6 முதல் 3 வங்கி கணக்குகளுக்கு மொத்தமாக RM325,800 பணத்தை அனுப்பினார்.
அதன் பிறகே அது ஒரு மோசடி என அவருக்குத் தெரிய வந்து, போலீஸில் புகார் செய்தார்.
இந்நிலையில், சந்தேகமான அழைப்புகளுக்கு தனிப்பட்ட வங்கி விவரங்களை பகிர வேண்டாம்; சந்தேகம் இருந்தால், நேரடியாக அதிகாரப்பூர்வ அமைப்பை தொடர்பு கொள்ளுங்கள் பொது மக்களுக்கு போலீஸ் மீண்டும் நினைவுறுத்தியுள்ளது.



