
பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 16 – நேற்று சபா கோத்தா கினாபாலுவிலுள்ள வணிக வளாகம் ஒன்றில், குழந்தைகள் சிலரை தலைக்கவசத்தால் (Helmet) அடித்து, காலால் உதைத்த காணொளி சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, போலீசார் சம்பந்தப்பட்ட ஆடவனைக் கைது செய்துள்ளனர்.
குழந்தைகளுக்கு காயம் ஏற்படுத்தும் நோக்கில் அவர்களை அடித்து துன்புறுத்தியதாக வந்த புகாரின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக காசிம் மூடா மாவட்ட காவல்துறை தலைவர் தெரிவித்தார்.
குற்றவாளி வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தும் நோக்கில் ஆபத்தான ஆயுதத்தை பயன்படுத்தியதால் போலீசார் இந்த வழக்கை குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவுச் செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், பொதுமக்கள் இச்சம்பவம் தொடர்பான தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாமென்றும் கூடுதல் தகவல் அறிந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தை அணுக வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டனர்.



