
கோலாலம்பூர், டிச 19 – கிறிஸ்துமஸ் பெருநாள் உணர்வை வாகன ஓட்டுனர் ஒருவர் நேரடியாக சாலைகளுக்கு எடுத்துச் சென்றுள்ளார். அவரது கார் மின்னும் LED விளக்குகளாலும் , கலைமான் கொம்புகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
TikTok பயனர் ஒருவர் இடுகையிட்ட ஒளிரும் காரின் வீடியோ வைரலாகி, சமூக ஊடக பயனர்களை மகிழ்வித்துள்ளது.
ஒளிரும் கார் விரைவாக நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்தது, அவர்களில் பலர் அண்மையில் அதை சாலையில் கண்டதாக பதிவிட்டுள்ளனர்.
பலர் அக்காரின் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து தங்களது கருத்துக்களையும் வெளியிட்டு மகிழ்ந்தனர்.
ஓட்டுநரும் பயணிகளும் எப்படி கதவுகளைத் திறந்தார்கள் என்று இன்னோரு பயனர், தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.
காரில் ஒரே ஒரு விஷயம் மட்டும் இல்லை,கூரையில் ஒரு கிறிஸ்துமஸ் மரம் என மற்றொருவர் தெரிவித்துள்ளார்.
ஒரு வேளை கிறிஸ்துமஸ் தாத்தாதான் அக்காரை ஓட்டுவார் என மற்றொரு பயணர் நகைச்சுவையாக சுட்டிக்காட்டினார்.



