
தைப்பே, டிசம்பர்-20 – தலைநகர் தைப்பேயில் முக்கிய மெட்ரோ இரயில் நிலையங்களில் நிகழ்ந்த வெடிகுண்டு மற்றும் கத்தி தாக்குதலால் தைவானில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை, Taipe Main Station மற்றும் Zhongshan Station-னில் முகமூடி அணிந்த மர்ம நபர் புகை குண்டுகளை வீசி, பயணிகளை கத்தியால் தாக்கினான்.
இதில் தாக்குதலை தடுக்க முயன்ற ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்தனர்; 5 பேர் காயமடைந்தனர்.
தாக்குதல் நடத்தியவன், கைதுச் செய்யப்படுவதிலிருந்து தப்பிக்க கட்டடத்திலிருந்து குதித்து உயிரிழந்ததாக போலீஸார் கூறினர்.
தைவான் பிரதமர் Cho Jung-tai, இது திட்டமிட்ட தாக்குதல் எனக் கூறி, விசாரணை நடைபெறுவதாக அறிவித்தார்.
அதே சமயம், தைவான் முழுவதும் இரயில் நிலையங்கள், நெடுஞ்சாலைகள், சுரங்கப்பாதைகள் மற்றும் விமான நிலையங்களில் உச்சக் கட்ட எச்சரிக்கையுடன் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.
தைவானில் வன்முறை குற்றங்கள் அரிதானவை.
கடைசியாக 2014-ல் நடந்த மெட்ரோ நிலையக் கத்தி தாக்குலில் நால்வர் உயிரிழந்தனர்; குற்றவாளி 2016-ல் தூக்கிலிடப்பட்டான்.



