
கோலாலம்பூர், டிசம்பர் 21-பாரம்பரிய மருத்துவத்தையும் நவீன அறிவியலையும் ஒருங்கிணைத்து ஆரோக்கியத்திற்கு புதிய மாற்றாக விளங்கி வரும் முன்னணி சுகாதார நிறுவனமான தாஸ்லி (Tasly), தனது 21-வது ஆண்டு விழாவை M Resort-ல் மிகச் சிறப்பாகக் கொண்டாடியது.
இந்த உயர்தர நிகழ்வில் சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
தாஸ்லி மலேசியாவின் தலைமை நிர்வாகி டத்தோ Dr ரவி, 21 ஆண்டுகளாக நிறுவனம் உருவாக்கிய நம்பிக்கை, நிலையான வளர்ச்சி, மற்றும் பயனர்களின் ஆதரவுக்கு நன்றி கூறினார்.
ஆரோக்கிய ஆலோசகர் Dr கவிதா, தாஸ்லியின் மூலிகைப் பொருட்கள் மற்றும் இந்தியாவில் வெற்றிகரமாக நிறைவுச் செய்த மருத்துவ சோதனைகள் குறித்து விளக்கினார்.
தவிர, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவில் வெற்றிகரமாக செயல்பட்ட Stem Sell திட்டம், தற்போது மலேசியச் சந்தையிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிகழ்வில் அறிவிக்கப்பட்டது.
தாஸ்லியின் புதிய பரிமாண பயணத்தின் தொடக்கமாக அமைந்த இந்நிகழ்வில், தாஸ்லி மலேசியா ஆலோசகரும், மக்கள் – சமூக நலத்தொண்டுகளைப் புரிந்து வருபருமான டத்தோ ஸ்ரீ மைக்கேல் சோங்,
மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், விநியோகம் மற்றும் வணிகத் துறைகளின் முன்னணி பிரதிநிதிகள், ஊடக நண்பர்கள் உள்ளிட்ட பல முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பு செய்தனர்.
இசை நிகழ்ச்சி மற்றும் இரவு விருந்தோடு கொண்டாட்டம் நிறைவடைந்தது.



