
சியோல், டிசம்பர்-22 – தென் கொரியாவில், முடி உதிர்வு சிகிச்சைக்கு அரசு நிதி வழங்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் Lee Jae Myung வலியுறுத்தியுள்ளார்.
“இது அழகுக்கான விஷயம் அல்ல, வாழ்வாதாரப் பிரச்னை” என்கிறார் அவர்.
தற்போது, மருத்துவ காரணங்களால் ஏற்படும் முடி உதிர்வுக்கு மட்டுமே காப்பீடு உள்ளது.
ஆனால், மரபணு காரணமாக ஏற்படும் முடி உதிர்வும் தேசிய சுகாதார காப்பீட்டில் சேர்க்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்.
சுமார் 10 மில்லியன் தென் கொரியர்கள் இந்த முடி உதிர்வு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.
அதிபரிடமிருந்து யாரும் எதிர்பார்க்காத இந்த பரிந்துரையை ‘அடடே’ என வலைத்தளவாசிகள் புகழ்ந்தாலும், பொது சுகாதார பராமரிப்புக்கான நிதி ஒதுக்கீடு தோற்றத்திற்கு முன்னுரிமைத் தர வேண்டுமா அல்லது உயிர் கொல்லி நோய்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டுமா என்ற பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது.



