
கோலாலாம்பூர், டிசம்பர் 22-உலகின் மிகச் சுத்தமான இந்து கிராமம் என்றால் அனைவரும் முதலில் யோசிப்பதை இந்தியாவைத் தான்!
ஆனால் அது தான் இல்லை…
உண்மையில், இந்தோனேசியாவின் பாலி தீவில் அமைந்துள்ள Penglipuran தான் உலகின் மிகச் சுத்தமான இந்து கிராமமாகும்.
சுமார் 700 ஆண்டுகள் பழமையான இந்த கிராமம், ஒழுங்கமைப்புடன் கூடிய வீடுகள், தூய்மையான சாலைகள் மற்றும் சமூக கட்டுப்பாடுகளுக்காக உலகப் புகழ் பெற்றதாகும்.
இங்கு நீங்கள் கண்ட இடங்களில் குப்பைகளைக் காண முடியாது; கிராமத்தின் மையப் பகுதியில் வாகனங்களும் அனுமதிக்கப்படுவதில்லை.
குற்றச்செயல்களும் மிகக் குறைவாக உள்ளன.
கிராம மக்கள் பாரம்பரிய இந்து கலாச்சாரத்தையும் ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்கின்றனர்.
இப்படி, தூய்மை, ஒழுக்கம் மற்றும் கலாச்சாரம் என மூன்றுக்கும் உதாரணமாக திகழ்கிறது இந்த Penglipuran கிராமம்.



