
கோலாலம்பூர், டிசம்பர் 23 – கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு, மலேசியாவின் முக்கிய நெடுஞ்சாலைகளில் தினமும் 2.6 மில்லியன் வாகனங்கள் பயணிக்கும் என மலேசிய நெடுஞ்சாலை ஆணையமான LLM கணித்துள்ளது.
டிசம்பர் 19 முதல், கிழக்குக் கரை, வடக்கு மற்றும் தெற்கு நோக்கிச் செல்லும் சாலைகளில் போக்குவரத்து அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சுமார் 2.2 மில்லியன் வாகனங்கள் PLUS நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்நிலையில் நெரிசலை குறைக்க, டிசம்பர் 23 நள்ளிரவு 12.01 முதல் மறுநாள் 24 ஆம் தேதி இரவு 11.59 வரை ‘class 1-இல் வகைப்படுத்தப்பட்ட இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 50 விழுக்காடு டோல் தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தள்ளுபடி Sultan Iskandar கட்டிட டோல் சாவடி மற்றும் Tanjung Kupang டோல் சாவடி ஆகிய 2 இடங்களில் மட்டும் அமல்படுத்தப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் smart lanes 30 இடங்களில் செயல்படுத்தப்படும் எனவும் அவசரப் பணிகளைத் தவிர வேறு எந்த காரணத்திற்காவும் சாலை மூடல்கள் ஏற்படாது என்றும் LLM அறிவித்துள்ளது.
பயணிகள் TuJu செயலி, TTA அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும், வாகன நிலை மற்றும் கட்டண அட்டை இருப்பை சரிபார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் இருசக்கர ஓட்டிகள் 571 தஞ்சுமிடங்களை தேவையின்போது பயன்படுத்தலாம் என்று குறிப்பிடப்பட்டது.



