
சுங்கை பூலோ, டிசம்பர் 26 – நேற்று, சுங்கை பூலோ PLUS நெடுஞ்சாலையில் 453 வது கிலோ மீட்டரில் 22 டயர்கள் கொண்ட டிரெய்லர் லாரி ஒன்று திடீரென பாதையை மாற்றி, நடுப்பாதையில் சென்று பெரும் அதிர்ச்சித்தக்க சம்பவத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ட்ரெய்லர் லாரி எதிர்பக்க திசையில் வந்துகொண்டிருந்த Hyundai Sonata காரை நெருங்கி சென்றதால், அக்காரை ஒட்டி வந்த 53 வயது ஆடவர் ஒருவர் பெரும் அதிர்ச்சி அடைந்து நிலை தடுமாறினார்.
இச்சம்பவத்தில் ட்ரெய்லர் காரை உரசி செல்லும் அபாய நிலை ஏற்பட்டது. பெரிய அளவில் விபத்து ஏதும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டாலும் இது ஆபத்தான ஓட்டமாகவே கருதப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான 50 விநாடி காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வந்ததைத் தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை டிரெய்லர் ஓட்டுநரும் சம்பந்தப்பட்ட மற்ற நபர்களும் போலீசில் புகார்கள் ஏதும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் போலீசார் இந்த வழக்கை சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் பதிவுச் செய்துள்ளனர்.



