
ஜெராண்டூட், டிசம்பர்-28 – பஹாங், ஜெராண்டூட், ஹுலு தெம்பெலிங் (Hulu Tembeling) பகுதியில் புலி தாக்கியதில், கிராம மக்களில் ஒருவர் வளர்த்து வந்த சினைப் பசு பலியானது.
நேற்று காலை 11 மணியளவில் காணாமல் போன பசு, பின்னர் கழுத்து மற்றும் இடுப்பில் புலியின் பற்கள் மற்றும் நகக் கீறல் காயங்களுடன் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
2014 முதல் தான் வளர்த்த வந்த பசு, இன்னும் சில நாட்களில் கன்றை ஈன்றவிருந்தாக, அதன் உரிமையாளர் சோகத்துடன் கூறினார்.
அக்டோபர் மாதத்திலிருந்து அவர் இழந்துள்ள இரண்டாவது மாடு இதுவாகும்.
முன்னதாக 2 வயதான காளையை அவர் புலியிடம் பறிகொடுத்தார்
இதன் மூலம் அம்முதியவர் RM6,500 நட்டத்தைச் சந்தித்துள்ளார்.
நவம்பர் 22 மற்றும் டிசம்பர் 8-ஆம் தேதிகளில் கிராமப் பகுதியில் புலி சுற்றித் திரிந்தது வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த வரிப் புலியின் நடமாட்டத்தால், ஹுலு தெம்பெலிங் சுற்று வட்டாரத்தில் உள்ள 300-க்கும் மேற்பட்ட மக்கள் தங்களின் பாதுகாப்பு குறித்து அச்சத்தில் உள்ளனர்.
சுமார் 30 இரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் புலிக்கு பயந்து வேலைக்கு செல்ல முடியாமல் உள்ளனர்.
வனத்துறையான PERHILITAN நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.



