Latestமலேசியா

தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலுக்கான புதிய இடத்தை அரசு ஒதுக்கியுள்ளது; கட்டுமானத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது- அமைச்சர் ஹானா இயோ அறிவிப்பு

கோலாலம்பூர், ஜனவரி-19-மஸ்ஜித் இந்தியா, தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலுக்கான புதிய இடம் முழுமையாக தயார் நிலையில் உள்ளதாக, கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹானா இயோ (Hanah Yeoh) அறிவித்துள்ளார்.

கடந்தாண்டு செப்டம்பர் 17 -ஆம் தேதி கோவில் கட்டடத் திட்டம் DBKL மூலம் அங்கீகரிக்கப்பட்டு, டிசம்பர் 5-ஆம் தேதி புதிய இடம், மதச்சார்பற்ற வழிபாட்டு இல்லம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஜனவரி 14-ஆம் தேதி நிலத்தில் கட்டடம் எழுப்ப முறையாக அனுமதி பெறப்பட்டது.

இன்று, சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புகளும் கலந்து கொள்ளும் ஒருங்கிணைப்பு கூட்டமும் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், தைப்பூசத்துக்குப் பிறகு மேற்கொண்டு தொடர்ந்து ஆலோசனைகள் நடைபெற்று, கோவில் இடமாற்றம் ஒழுங்காகவும், பரஸ்பர மரியாதையுடனும் நடைபெறுவதை அரசாங்கம் உறுதிச் செய்யும் என்றார் அவர்.

மடானி மசூதி மேம்பாட்டுத் திட்டத்துடன் இணைந்து, சட்டப்படி, திட்டமிட்ட முறையில், மத நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டு இவ்விவகாரம் கையாளப்படுவதாகவும் அவர் சொன்னார்.

கூட்டரசு பிரதேச நலன் கருதி தனக்கு உருதுனையாக இருந்த பிரதமர் துறையின் முன்னாள் அமைச்சர் Datuk Seri Dr. Zaliha Mustafa , கூட்டரசு பிரதேச மேயர் Datuk Seri Maimunah Sharif, இலக்கவியல் அமைச்சர் Gobind Singh Deo, மனிதவள அமைச்சர் Dato’ Sri Ramanan Ramakrishnan, மஇகா தேசியத்தலைவர் Tan Sri SA. Vigneswaran ஆகியோருக்கு இவ்வேளையில் ஹானா நன்றித் தெரிவித்தார்.

கூட்டரசு பிரதேச அமைச்சராக நியமிக்கப்பட்டப் பிறகு முதன் முறையாக ஹானா இயோ இன்று அக்கோயிலுக்கு வருகை மேற்கொண்டு நிலவரங்களைக் கண்டறிந்தார்.

அவருடன் Datuk Seri ரமணன் ராமகிருஷ்ணன், தான் ஸ்ரீ SA விக்னேஸ்வரன், R. யுனேஸ்வரன், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் Prabakaran உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

திடீரென 7 நாட்களுக்குள் நிலத்தை காலி செய்ய வேண்டுமென, நிலத்துக்குச் சொந்தக்காரரான ஜேக்கல் டிரேடிங் (Jakel Trading) ஆலய நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், அமைச்சர் ஹானாவின் வருகையும் உத்தரவாதமும் நிலைமையை சற்று தணித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!