Latestஇந்தியா

பாகிஸ்தான் குல் பிளசா வர்த்தக வளாகத்தில் தீ விபத்து 26 சடலங்கள் மீட்கப்பட்டன

புதுடில்லி, ஜன 20 – பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள குல் பிளாசா வணிக வளாகத்தில் இருந்து மொத்தம் 26 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் டஜன் கணக்கானவர்கள் இன்னும் காணவில்லை என அறிவிக்கப்பட்டன.

1,200 கடைகளுடன் , 4,500 தொழிலாளர்கள் வசிக்கும் பல மாடிகளைக் கொண்ட அந்த வர்த்தக வாளகத்தில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தீயை அணைக்க 200 தீயணைப்பு வீரர்கள் கொண்ட குழு 24 மணி நேரத்திற்கும் மேலாக போராடி வெற்றி பெற்றது.

இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் (144,738 ரிங்கிட்) இழப்பீடு வழங்குவதாக பாகிஸ்தானின் சிந்து மாநில முதலமைச்சர் முராத் அலி ஷா
( Murat Ali Shah ) அறிவித்தார்.

இந்த தீவிபத்திற்குப் பின் இன்னும் 65 தனிப்பட்ட நபர்கள் எங்கு இருக்கின்றனர் என்ற தகவல் எதுவும் தெரியவில்லை என ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. இந்த தீவிபத்து குறித்த விசாரணை இன்னமும் நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரத்தில் அலட்சியப் போக்கு கண்டுப்பிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!