
கோலாலம்பூர், ஜனவரி 26 – நெகிரி செம்பிலான் மாநிலம், நிலநடுக்க ஆபத்து வளையத்தில் இல்லை என்றாலும், அங்கு சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படக்கூடும் என இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் Datuk Seri Arthur Joseph Kurup எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நெகிரி செம்பிலானில் உள்ள பழமையான பிளவு கோடுகள், சுற்றுப்புற பகுதிகளில் ஏற்படும் நிலத்தட்டு இயக்கங்களின் காரணமாக மீண்டும் செயல்பட வாய்ப்பு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மலேசியா கனிம மற்றும் புவியியல் துறை மேற்கொண்ட தொழில்நுட்ப கண்காணிப்பின் படி, இந்த மாநிலம் அதிக ஆபத்துள்ள நிலநடுக்கப் பகுதியாக வகைப்படுத்தப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும், Kuala Pilah பிளவு மண்டலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படும் அபாயம் அதிகம் இருக்கின்றது. நாடாளுமன்றத்தில், Jelebu நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Seri Jalaluddin Alia எழுப்பிய துணைக் கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனை விளக்கினார்.
எதிர்காலத்தில், இந்த பிளவு கோடுகளைச் சுற்றிய பகுதிகளில் சிறிய நிலநடுக்கங்கள் நிகழும் சாத்தியத்தை முழுமையாக மறுக்க முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.



