
அம்பாங், நவம்பர்-8 – அம்பாங்கில் 1 மில்லியன் ரிங்கிட் ரொக்கப் பணம் அடங்கிய பை காணாமல் போன சம்பவம் தொடர்பில், இரு பாதுகாவலர்கள் கைதாகியுள்ளனர்.
அவர்கள் முறையே 52 வயது ஆடவரும் 38 வயது பெண்ணும் என, அம்பாங் ஜெயா போலீஸ் தலைவர் ACP அசாம் இஸ்மாயில் (Azam Ismail) தெரிவித்தார்.
இருவரும் விசாரணைக்காக 4 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அப்பணம் வைக்கப்பட்டிருந்த பை, அது காணாமல் போனதாகக் கூறப்பட்ட சில மணி நேரங்களிலேயே காரோட்டி ஒருவரால் கண்டெடுக்கப்பட்டு, போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது.
Ampang Point Mall பேரங்காடியில் உள்ள ஒரு வங்கியிலிருந்து நேற்று முன்தினம் பாதுகாப்பு நிறுவனத்தின் வேனில் எடுத்துச் செல்லும் போது, அப்பணப் பை சாலையில் விழுந்தது.