
வாஷிங்டன், அமெரிக்கா, டிசம்பர் 16 – கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், அமெரிக்க அதிபர் டோனால்ட் ட்ரம்ப் பேசிய உரையைத் தவறாகத் திருத்தி ஆவணப்படமாக வெளியிட்ட BBC நிறுவனத்தின் மீது, அவர் குற்றம் சாட்டி குறைந்தது 10 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, பிபிசியின் Panorama நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட ஆவணப்படத்தில், அவரது உரையின் பகுதிகள் இணைக்கப்பட்டு, அவர் Capitol கட்டிடத்தை தாக்குமாறு ஆதரவாளர்களை தூண்டியதாக தவறாக காட்டப்பட்டதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிபிசி தரப்பு அவதூறு குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள போதிலும், அதன் தலைவர் டிரம்புக்கு மன்னிப்புக் கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்த வழக்கு, ஊடக நிறுவனங்களுக்கு எதிராக டிரம்ப் தொடரும் சமீபத்திய சட்ட நடவடிக்கைகளில் ஒன்றாகும்.



