Latestமலேசியா

Blood Moon முழு சந்திர கிரகண நிகழ்வை கண்டு களித்த மலேசியர்கள்

கோலாலம்பூர், செப்டம்பர்-8 – ‘Blood Moon’ என்றழைக்கப்படும் முழு சந்திர கிரகணம் நேற்றிரவு மலேசிய வான்வெளியை அலங்கரித்தது.

பூமிக்கு மிக அருகில் அதாவது தோராயமாக 364,773 கிலோ மீட்டர் தொலைவில் சந்திரன் இருக்கும்போது, இந்த நிகழ்வு ஏற்படுகிறது.

இதனால் பூமியின் நிழல் சந்திரனை முழுவதுமாக மறைக்கிறது.

கிரகணத்தின் உச்சத்தில், பூமியின் வளிமண்டலத்தால் சூரிய ஒளி ஒளிவிலகல் ஏற்படுவதால், சந்திரன்
சிவப்பு நிறத்தில் தோன்றும்; இதுவே ’Blood Moon’ என்றழைக்கப்படுகிறது.

இந்த ஆண்டின் அந்த இரண்டாவது சந்திர கிரகணம், சரியாக இரவு 11.28 மணிக்குத் தோன்றி விடியற்காலை 2 மணி வரை நீடித்தது.

பொது மக்கள் காண வாய்ப்பளிக்கும் வகையில், MYSA எனும் மலேசிய விண்வெளி நிறுவனம், பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து, நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட பல இடங்களில் முழு சந்திர கிரகணத்தைக் காணும் திட்டத்தை ஏற்பாடு செய்தது.

கோலாலாம்பூர் Planetarium Negara-வில் தொலைநோக்கி வாயிலாக பொது மக்கள் அந்நிகழ்வை கண்டுகளித்ததும் குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட கண்டங்கள் முழுவதும் இந்த நிகழ்வை மக்கள் கண்டு களித்தனர்.

இந்த அரிய வானியல் நிகழ்வை நேற்று தவறவிட்டவர்கள் இனி 2028-ஆம் ஆண்டில் தான் அதனைக் காண முடியும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!