Latestமலேசியா

BMW & Perodua வாகனத்திற்குமிடையே ஏற்பட்டது கொள்ளை முயற்சி அல்ல; வதந்திகளை பரப்பாதீர் – போலீஸ் அறிவுறுத்தல்

கோத்தா திங்கி, டிசம்பர் 22 -அண்மையில் சமூக ஊடகங்களில் வைரலான, இரண்டு கார்கள் தொடர்பான சம்பவம், கொள்ளை முயற்சியோடு தொடர்புடையது அல்ல என்று கோத்தா திங்கி போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த நவம்பர் 14 ஆம் தேதியன்று, பண்டார் தெங்காரா சாலையில் கருப்பு நிற BMW வாகனத்திற்கும் சாம்பல் நிற Perodua Ativa வாகனத்திற்கும் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பான காணொளி வலைத்தளத்தில் வைரலாகி வந்தது.

அச்சம்பவத்திற்கு பிறகு BMW வாகனத்தின் ஓட்டுநர் போலீசில் புகார் அளித்து, அது கொள்ளை முயற்சி அல்ல என்று கூறி விளக்கமளித்துள்ளார். Perodua Ativa ஓட்டுநர் இதுவரை எந்த புகாரையும் அளிக்கவில்லை என்றும் அவரை விசாரணைக்காக போலீசார் அழைக்கவுள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.

இரு வாகன ஓட்டுனருக்குமிடையேயான கருத்து வேறுபாடு காரணமாகதான் இச்சம்பவம் நிகழ்ந்ததே தவிர இது கொள்ளை முயற்சி அல்ல என்பதை போலீஸ் தரப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும், தவறான தகவல்கள் விசாரணையை பாதிக்கலாம் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!