Latestமலேசியா

Capital A ஒழுங்குமுறை தேவைகளைப் பூர்த்திச் செய்கிறது, 2025 இறுதிக்குள் PN17-லிருந்து வெளியேறும்

கோலாலாம்பூர், அக்டோபர்-31,

Capital A Bhd அதன் விமான நடவடிக்கைகளை AirAsia குழுமத்திற்கு மாற்றுவதற்கான அனைத்து ஒழுங்குமுறை மற்றும் பங்குதாரர் தேவைகளையும் பூர்த்திச் செய்துள்ளது.

இதையடுத்து, இவ்வாண்டு இறுதிக்குள் PN17 நடைமுறை நோட்டீஸ் அந்தஸ்திலிருந்து அது வெளியேறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நடவடிக்கையானது, கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு நிறுவனத்தை மீட்டெடுக்கும் முயற்சியின் கடைசிக் கட்டத்தைக் குறிப்பதாக, அதன் தலைமை செயலதிகாரி தான் ஸ்ரீ தோனி ஃபெர்னாண்டஸ் கூறினார்.

வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் முழு மறுசீரமைப்பையும் முடிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

AirAsia X க்கு, அனைத்து பங்குதாரர்களிடமிருந்தும் ஒப்புதலையும் RM1 பில்லியன் மதிப்பில் தனியார் வேலைவாய்ப்பு உறுதிமொழி கடிதத்தையும் Capital A பெற்றுள்ளது; தவிர, தாய்லாந்தில் ஒழுங்குமுறை சிக்கல்களும் தீர்க்கப்பட்டுள்ளன.

மறுசீரமைப்பு முழுமைப் பெற்ற கையோடு, செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த ஏதுவாக Airbus A321neo மற்றும் A321XLR விமானங்களைப் பயன்படுத்தி, ஏர்ஏசியா குழுமம் 7 குறுகிய மற்றும் நடுத்தர தூர விமானங்களை ஒரே வட்டார கட்டமைப்பின் கீழ் ஒருங்கிணைக்கும்.

அதே சமயம் Capital A, ADE, Teleport, AirAsia MOVE, Santan மற்றும் AirAsia NEXT ஆகிய 5 ஐந்து உயர் திறன் கொண்ட விமானப் போக்குவரத்து அல்லாத பிரிவுகளில் கவனம் செலுத்தும்.

10 ஆண்டுகளுக்குள் விமானங்களின் எண்ணிக்கையை 255-லிருந்து 600-க்கும் அதிகமாக உயர்த்தவும், வருடாந்திர பயணிகளை 155 மில்லியனாக அதிகரிக்கவும், பறக்கும் இலக்குகளை 175-தாக விரிவுபடுத்தவும் அது திட்டமிட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!