Latestமலேசியா

CAS அனுமதி: இறுதி தீர்ப்பு வரும் வரை 7 ஹரிமாவ் மலாயா வீரர்கள் மீண்டும் விளையாடலாம்

கிளானா ஜெயா, ஜனவரி-27-ஆவண மோசடியில் சிக்கிய ஹரிமாவ் மலாயா கால்பந்து அணியின் 7 கலப்பு மரபின ஆட்டக்காரர்கள் விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

அனைத்துலகக் கால்பந்து சம்மேளமான FIFA அந்த எழுவருக்கும் விதித்த 12-மாத கால தடையை, அனைத்துலக விளையாட்டு நடுவர் மன்றமான CAS தற்காலிகமாக நீக்கியுள்ளது.

இத்தகவலை, FAM எனப்படும் மலேசியக் கால்பந்து சங்கம் உறுதிப்படுத்தியது.

இதன் மூலம், 7 ஹரிமாவு மலாயா வீரர்களும் மீண்டும் விளையாட அனுமதி பெற்றுள்ளனர்.

அதாவது, CAS வழங்கிய இந்த இடைக்கால உத்தரவால், இறுதி தீர்ப்பு வரும் வரை 7 பேரும் உள்நாட்டு மற்றும் அனைத்துலகப் போட்டிகளில் பங்கேற்க முடியும்.

இந்த முடிவு, இரசிகர்கள் மற்றும் மலேசியக் கால்பந்து வட்டாரங்களில் தற்காலிக நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!