
கோலாலம்பூர், நவம்பர்-4 – அரசியல் ஆர்வலரான Chegubard எனப்படும் பட்ருல் ஹிஷாம் ஷஹாரின், சமூக ஊடகத்தில் வெளியிட்ட கருத்துகள் தொடர்பில், பெர்சாத்து உச்சமன்ற உறுப்பினர் டத்தோ ஆர். ஸ்ரீ சஞ்சீவன் சட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
அக்டோபர் 12-ஆம் தேதி வெளியிட்ட “#memeachadlam” எனும் நேரலை வீடியோவில் தம்மை அவதூறு செய்ததாகக் கூறி, Chegubard-டுக்கு வழக்கறிஞர் மூலம் சஞ்சீவன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த ‘அவதூறு’ வீடியோக்கு சுமார் 65,000 பார்வைகள், 2,300 _likes_கள் மற்றும் 205 கருத்துகள் வந்ததாகக் கூறப்படுகிறது.
இது சஞ்சீவனின் நற்பெயருக்கு கடுமையான களங்கத்தை ஏற்படுத்தியிருப்பதால், நோட்டீஸ் கிடைத்த 7 நாட்களுக்குள் RM1 மில்லியன் இழப்பீடு தருவதுடன், 48 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டு சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்கவும் வேண்டுமென அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சரியான பதில் இல்லாவிட்டால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.



