Latest
DBKL அமலாக்க அதிகாரிகளின் சீருடையில் உடல் கேமராக்கள் பயன்பாடு விரிவுபடுத்தப்படும்

கோலாலம்பூர், ஏப்ரல்-11,
செகாம்புட்டில் வெளிநாட்டவர்கள் நடத்தி வந்த 3 கடைகளை கோலாலம்பூர் மாநகர மன்றமான DBKL உடனடியாக மூடியுள்ளது.
குடிநுழைவுத் துறை மற்றும் உள்நாட்டு வாணிபம் – வாழ்க்கைச் செலவின அமைச்சான KPDN-னுடன் ஒருங்கிணைந்து அந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஓர் உள்ளூர் ஆடவரும் 4 வெளிநாட்டவர்களும் ஆவண சரிபார்ப்புக்காக பின்னர் குடிநுழைவுத் து அலுவலகம் கொண்டுச் செல்லப்பட்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட வியாபாரப் பொருட்கள் கோலாலம்பூர் KPDN அலுவலகம் கொண்டுச் செல்லப்பட்டன.
இது போன்ற அதிரடிச் சோதனைகள் தொடருமென DBKL கூறியது.
பொது மக்களும் DBKL இணைய அகப்பக்கத்தில் புகாரளிக்கலாம்