பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 24 – கடந்தாண்டு, 61 வயது e-hailing ஓட்டுநரை, செம்பனை தோட்டத்தில் கொலை செய்ததாக அவரது முன்னாள் மனைவியும் வளர்ப்பு தம்பியின் மீதும், இன்று தாவாவ் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
இருப்பினும், அக்குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது தங்கள் மீதான குற்றத்தை அவ்விருவரும் மறுத்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட 35 வயது Nurima Juli மற்றும் 30 வயது Sadam Kiram ஆகிய இருவரும் இணைந்து, கடந்தாண்டு ஜனவரி 13ஆம் திகதி, அந்த e-hailing ஓட்டுநரைக் கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
தண்டனை சட்டம் செக்ஷ்ன் 302 மற்றும் செக்ஷ்ன் 34-யின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது குறைந்தபட்சம் 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
முன்னதாக இக்கொலைக்கு உடன் செயல்பட்டதாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
எனினும், இவ்வாண்டு ஜனவரி 25ஆம் திகதி, நுரிமா தனது முன்னாள் கணவரைக் கொன்றதை திடீரென ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட இதர எண்மர் மீது வழக்குத் தொடர வேண்டாம் என்று அரசுத் தரப்பு கோரியது.
அதனைத் தொடர்ந்து, அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.