
நியூயார்க்: Elon Musk-க்கு வழங்கப்பட்ட 56 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள டெஸ்லா சம்பளத் திட்டத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
2018-ல் வழங்கப்பட்ட இந்த திட்டத்தை கீழ்நிலை நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. ஆனால், Musk ஒப்பந்த நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்றியுள்ளதோடு, டெஸ்லா மற்றும் பங்குதாரர்கள் லாபம் பெற்றுள்ளனர் எனக் கூறி அந்த தீர்ப்பை நீதிமன்றம் தற்போது மாற்றியுள்ளது.
இந்த சம்பளத் திட்டம் அதிகம் என பங்குதாரர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் தற்போது அந்த வழக்கில் Musk- க்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது.



