
கோலாலாம்பூர், பிப்ரவரி-3-உள்ளூர் தளவாட விற்பனையாளரான Fella Design, உலகின் முன்னணி தளவாட முத்திரையான Ashley Furniture-ருடன் இணைந்து, அம்பாங் உத்தாமாவில் 20,000 சதுர அடியில் புதிய இரட்டை முத்திரை கண்காட்சி அறையைத் திறந்துள்ளது.
இது, Ashley-வின் உலகளாவிய வடிவமைப்பையும் Fella-வின் உள்ளூர் ஜவுளி நிபுணத்துவத்தையும் ஒன்றிணைத்து, ஒரே கூடையின் கீழ் மிகச் சிறந்த சில்லறை விற்பனை அனுபவத்தை வழங்குகிறது.
இப்புதியக் கண்காட்சி அறையின் திறப்பு, Fella Design நிறுவனத்தின் 40-ஆம் ஆண்டு நிறைவு மற்றும் மலேசியாவில் Ashley-வுடன் 11 ஆண்டு கால ஒத்துழைப்பைக் குறிப்பதாக, Fella Design Sdn Bhd நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி Yu Kong Cing கூறினார்.
Fella Design நிறுவனத்தின் வளர்ச்சியானது, வடிவமைப்பு புதுமைகள், வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்துகொள்ளும் திறன், மற்றும் அனைத்துலக வியூக ஒத்துழைப்பு ஆகியவற்றால் உந்தச் செய்யப்படுவதாக அவர் சொன்னார்.
இவ்வேளையில், இத்துறையில் Fella Design நிறுவனத்தின் 40 ஆண்டு கால பயணம் பல்வேறு ஏற்றுத் தாழ்வுகளை கொண்டதாக, அதன் இயக்குநர் John Wong Chee Onn கூறினார்.
என்னதான் ஒரு நிலையான இடத்தைப் பெற்றாலும், added value அதாவது மதிப்புக் கூட்டல் என்பது வணிகத்திற்கு இன்றிமையாதது எனக் குறிப்பிட்ட அவர், காலத்திற்கு ஏற்ற சுயப் புதுப்பித்தலும் நிறுவனத்தின் வெற்றிக்குத் துணையாக இருப்பதாக சொன்னார்.
இதனிடையே, இந்த கண்காட்சி அறையின் திறப்பு, உலகளாவிய உரிமம் மூலம் மலேசியச் சந்தைக்கான Ashley நிறுவனத்தின் நீண்டகால கடப்பாட்டை பிரதிபலிக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில், அமெரிக்க வணிக மாதிரியை மலேசிய சந்தைக்கு ஏற்ப இரு நிறுவனங்களும் இணைந்து மாற்றியமைத்துள்ளதாக, Ashley Furniture நிறுவனத்தின் ஆசிய மண்டலத்திற்கான அனைத்துலக விற்பனை துணைத் தலைவர் Jason Lee தெரிவித்தார்.
தாமான் அம்பாங் உத்தாமாவில் உள்ள இந்த Fella Design & Ashley Furniture HomeStore கண்காட்சி அறை, ஜனவரி 31 முதல் பொது மக்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய வடிவமைப்பு , உள்ளூர் வசதி ஆகியவற்றை ஒரே கூரையின் கீழ் இணைத்து, உள்ளூர் வணிக முத்திரைகளை வலுப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு முழுமையான அனுபவத்தை இது வழங்குகிறது.



