
கெடா, சுங்கை பட்டாணி, ஸ்கார்போரோ (Scarboro) தமிழ்ப் பள்ளியின் மாணவர் நல துணைத் தலைமையாசிரியராக இருப்பவர் புனிதா சுப்ரமணியம்.
ஆங்கில மொழி கற்பித்தலில் முதுகலை பட்டமும், AI தகவல் தொழில்நுட்பத்தில் பட்டமும் பெற்ற இவருக்கு அண்மையில் டிஜிட்டல் கல்விக்காக Global Excellence Conclave வழங்கும் Global Education Awards 2025இல் Excellense in Digital Innovation in Education என்ற பிரசித்திப் பெற்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் டிஜிட்டல் புத்தாக்கத்தை முன்னெடுத்து வரும் புனிதா, பகுதி நகர்ப்புற பள்ளியில் பல ஆண்டுகள் சாதனங்களின் பற்றாக்குறை மற்றும் நிலையான இணைய வசதி இல்லாமை போன்ற சவால்களை எதிர்கொண்டவர்.
ஆனால், தனது இடைவிடாத முயற்சியால் நிலையான இணைய இணைப்பை மீட்டார்.
அதோடு, Apple தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, iPad, Apple TV மற்றும் படைப்பாற்றல் செயலிகளை இணைத்து, மாணவர்களின் கல்வியறிவு, தொடர்பு திறன், விமர்சன சிந்தனை ஆகியவற்றை வலுப்படுத்தியுள்ளார்.
அவரின் இப்பணிகளை அங்கீகரிக்கும் வகையிலேயே மலேசிய அரசாங்க ஆதரவுடன் மொன்மொழியப்பட்டு இந்த விருதையும் பெற்றுள்ளார்.
கிராமப்புற குழந்தைகளும் சம வாய்ப்புகளை பெற வேண்டும் என்ற உறுதியுடன், மாநில அளவிலான தொழில்நுட்ப முயற்சிகளையும், மாணவர் அதிகாரமளிப்பு திட்டங்களையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்.
ஆசிரியை புனிதாவின் மன உறுதி, நம்பிக்கை மற்றும் உலகம் பாராட்டும் சேவை அனைவருக்கும் ஒரு முன்னோடியாகும்.



