Latestமலேசியா

Golden Empire பிரதான நட்சத்திரம் 2025 விருதளிப்பு; 120 மலேசியத் திறமையாளர்களை அங்கீகரித்த மேடை

ஷா ஆலாம், டிசம்பர்-14 – Golden Empire Media நிறுவனம் கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி Golden Empire பிரதான நட்சத்திரம் 2025 விருது விழாவை கோலாகலமாக நடத்தியது.

ஷா ஆலாம், புக்கிட் கெமுனிங் மாநாட்டு மையத்தில், மலேசியாவின் பல துறைகளில் சிறந்து விளங்கும் 110 பேரை இந்த விருது விழா கௌரவித்தது.

நடிப்பு, பாடல், நடனம், உருமி மேளம், விளையாட்டு, முக அலங்காரம், modeling, புகைப்படம், வீடியோ, drone, குறும்படம், இயக்கம், செய்தி வாசிப்பு, நிகழ்ச்சி நடத்துதல் போன்ற துறைகளில் திறமையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

தவிர 10 இளம் சாம்பியன்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

அதோடு, பல்வேறு துறைகளில் தன்னிகரற்ற அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பு செய்தோருக்கு சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மகேந்திரன் நடராஜா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, தலைமை விருந்தினர்களாக தேசிய நில நிதி கூட்டுறவுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ சகாதேவன் பாலையா மற்றும் சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. பாப்பாராயுடு கலந்து சிறப்பித்தனர்.

பல்வேறு சமூக, கலாச்சார, தொழில் தலைவர்களும் பிரமுகர்களும் இதில் பங்கேற்றனர்.

முக்கியமாக முத்தகலைஞரான Tokoh சத்தியாவுக்கு, வாழ்நாள் பங்களிப்பு மற்றும் சமூக அர்ப்பணிப்புக்காக விருது வழங்கப்பட்டது.

இவ்விருது விழா, மலேசியத் திறமைகளை ஒன்றிணைத்து, புதிய தலைமுறைக்கு ஊக்கமளிக்கும் ஒரு மேடையாக அமைந்தது என்றால் மிகையில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!