Latestஉலகம்

‘High heels’ அணிந்து பின்னோக்கி ஓடி, உலக சாதனை படைத்த ஸ்பெயின் வீரர்

ஸ்பெயின், செப்டம்பர் 10 – ஸ்பெயினைச் சேர்ந்த கிறிஸ்டியன் ரோபர்டோ லோபஸ் ரோட்ரிக்ஸ் என்ற வீரர், 2.76 அங்குல உயரமுள்ள ‘ஹைஹீல்ஸ்’ காலணிகளை அணிந்து கொண்டு, 100 மீட்டர் தூரத்தை பின்னோக்கி ஓடிச்சென்று 16.55 விநாடிகளில் கடந்து மீண்டுமொரு உலக சாதனையைப் படைத்துள்ளார்.

அவர் சுமார் 328 அடிகளைப் பின்னோக்கி ஓடியவாறே கடந்து, இந்த மாறுபட்ட சாதனையை படைத்து அனைவரையும் ஆச்சரியப்பட செய்திருக்கின்றார்.

சுமார் 80 க்கும் மேற்பட்ட கின்னஸ் உலகச் சாதனைகளை கைப்பற்றிய அவர் இதே வகை ஓட்டத்தில் 20.05 விநாடிகள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

400 மீட்டர் தூரத்தை மரக் காலணியுடன் கடந்தது, சிலிப்பர் அணிந்து கொண்டு 100 மீட்டரை குறைந்த விநாடிகளில் அடைந்தது, கையில் ஸ்நூக்கர் குச்சியுடன் 1.6 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்தது போன்ற வித்தியாசமான சாதனைகளை படைப்பதில் கிறிஸ்டியன் ரோபர்டோ
மிகுந்த வல்லமைப் படைத்தவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!