
ஷா ஆலாம், மார்ச்-16 – ஷா ஆலாமில் இருந்து கிள்ளான் நோக்கிச் செல்லும் கூட்டரசு நெடுஞ்சாலையின் 6.5-ஆவது கிலோ மீட்டரில், i-City அருகேயுள்ள மேம்பாலத்திலிருந்து விழுந்து பெண்ணொருவர் மரணமடைந்தார்.
நேற்று பிற்பகல் 3 மணி வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக, வட கிள்ளான் போலீஸ் தலைவர் எஸ். விஜயராவ் கூறினார்.
தகவல் கிடைத்து சம்பவ இடம் விரைந்த ரோந்து போலீஸார், சாலையில் ஒரு பெண் விழந்துகிடப்பதைக் கண்டனர்.
எனினும் உடன் வந்த ஷா ஆலாம் மருத்துவமனையின் மருத்துவப் பணியாளர்கள், அப்பெண் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர்.
மேம்பாலத்திலிருந்து விழுந்தவரை, அவ்வழியே சென்ற வாகனமும் மோதியது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
எனினும் அவர் எந்த நாட்டவர் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் அச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டதாக விஜயராவ் கூறினார்.