Latestமலேசியா

ITCEDU ஏற்பாட்டில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான இடைநிலைப் பள்ளியை நோக்கி தயார்நிலை பயிற்சி பட்டறை

செமஞே, டிசம்பர்-15,

தமிழ்ப் பள்ளி மாணவர்களை இடைநிலைப் பள்ளிக்குத் தயார் படுத்தும் நோக்கில், ITCEDU Ventures Sdn Bhd நிறுவனம், நேற்று காஜாங், செமஞேவில் இலவசக் கல்வி முகாமை நடத்தியது.

Nottingham பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஹுலு லங்காட் மாவட்டத்தில் உள்ள 7 தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த நான்கு முதல் ஆறாம் ஆண்டு வரையிலான மாணவர்கள் பங்கேற்றனர்.

பெற்றோர்களும் கலந்துகொண்ட இம்முகாமில், மாணவர்களின் இடைநிலைப் பள்ளி பயணத்திற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

முழு நேர வழிகாட்டி ஆசிரியையான பிரவினா மணிக்கவாசகம், ஜோகூர் பாரு Impian Emas இடைநிலைப் பள்ளியின் மாணவர் விவகாரங்களுக்கான துணைத் தலைமையாசிரியர் குமரன், பிரபல வழக்குரைஞர் சிவராம் மருதமுத்து மற்றும் ITCEDU Ventures நிறுவனத்தின் இயக்குநர் சோலமன் சாந்தியாபூ முக்கிய உரையாற்றினர்.

இந்த இலவச முகாமை நடத்தும் சிந்தனை உருவானது குறித்து சோலமன் வணக்கம் மலேசியாவிடம் விவரித்தார்.

இந்நிகழ்ச்சி அடைய விரும்பும் நோக்கம் குறித்து அவரிடம் கேட்டபோது…

இம்முகாம் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் தயார் நிலைக்கு உறுதுணையாக இருக்குமென, செமஞே தமிழ்ப் பள்ளியின் தலைமையாசிரியர் நெடுஞ்செழியன் நம்பிக்கைத் தெரிவித்தார்.

சுமார் 300 மாணவர்களும்
பெற்றோர்களும் பங்கேற்ற இம்முகாமில், கல்வி மற்றும் சமூக சவால்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் மனநிறைவு தெரிவித்தனர்.

காஜாங், செர்டாங், செமஞே, சிரம்பான் ஆகிய இடங்களில் கிளைகளுடன், ITCEDU தரமான கல்வியின் மூலம் மாணவர்களை மேம்படுத்துவதற்கான தனது பணியைத் தொடர்ந்து செய்து வருவதை பெற்றோர்களும் பாராட்டினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!