
கோலாலாம்பூர், ஜனவரி-19 – மலேசியாவின் பல்லின சமூக ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் கன்னி பொங்கல் விழா 2026, கோலாலம்பூரில் உள்ள புக்கிட் கியாரா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் விமரிசையாக நடைபெற்றது.
பல தசாப்தங்களாக, மலேசியாவின் ஒரு நம்பகமான வீட்டுப் பெயராக இருந்து வரும் ஜாஸ்மின் ஃபுட் கார்ப்பரேஷன் (JFC) நிறுவனத்தின் முக்கிய ஆதரவில், தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
அவர்களுடன் CSR Sugar, QBB Ghee மற்றும் GoodDay Milk போன்ற நிதி ஆதரவாளர்களும் இணைந்திருந்தனர்.
இந்த Pongal Perpaduan விழாவின் சிறப்பம்சமாக Jasmine Super 5 அரிசியைப் பயன்படுத்தி 50 பொங்கல் பானைகள் ஒரே நேரத்தில் பொங்கல் வைக்கப்பட்டது.
பாரம்பரிய நடனங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
நாம் உண்ணும் உணவானது சமூகங்களை ஒன்றிணைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்பதையும், மலேசியர்களிடையே புரிதலைய வலுப்படுத்தும் என்பதையும் இந்த Pongal Perpaduan பிரதிபலித்தாக, JFC நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி ஆலன் குவாங் பெருமிதம் சதரிவித்தார்.
முஸ்லீம், புத்தம், கிறீஸ்தவம் உள்ளிட்ட பல்வேறு மதத்தவர்களின் பங்கேற்புடன், நாட்டின் கலாச்சார பன்முகத் தன்மையைக் கொண்டாடும் ஒரு தளமாக இவ்விழா அமைந்து.
சுற்று வட்டாரத்திலிருந்து சுமார் 250 பேர் இந்த Pongal Perpaduan நிகழ்வில் பங்கேற்றனர்.



