
ஜோகூர் பாரு, ஜனவரி-9 – ஜோகூர் பாரு செல்லும் வழியில் PLUS நெடுஞ்சாலையின் 27-வது கிலோ மீட்டரில் லாரியின் பின்புறத்தை சுற்றுலாப் பேருந்து மோதியதில், மூவர் காயமடைந்தனர்.
அவர்கள் முறையே 28 வயது பேருந்து ஓட்டுநர், 70 வயது பயணி மற்றும் 33 வயது லாரி ஓட்டுநர் ஆவர்.
மூவரும் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
இன்று காலை மணி 6.30-க்கு நிகழ்ந்த அவ்விபத்துக்கான காரணத்தை போலீஸ் விசாரித்து வருகிறது.