Latestமலேசியா

‘ஆதாரங்களில் அப்பட்டமான முரண்பாடு’ ; கொலை வழக்கில் 4 பேர் விடுதலை

ஷா ஆலாம், பிப்ரவரி-20 – 2019-ஆம் ஆண்டில் கோம்பாக்கில் 33 வயது ஆடவரைக் கொலைச் செய்த வழக்கில், 4 ஆடவர்களை ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

அரசுத் தரப்பு தனது குற்றச்சாட்டுளை நிரூபிக்கத் தவறி விட்டது; குறிப்பாக அந்நால்வருக்கும் எதிரான ஆதாரங்களில் அப்பட்டமான முரண்பாடுகள் இருந்தன.

எனவே குற்றஞ்சாட்டப்பட்வர்களை விடுவிப்பதாக நீதிபதி Norsharidah Awang அறிவித்தார்.

33 வயது K. சுரேஷ், 36 வயது V கோபிநாதன், 36 வயது Abdul Malek Najeeb Deen, 30 வயது G நவிந்திரன் ஆகியோரோ அந்நால்வராவர்.

2019 ஜூலை 30-ஆம் தேதி இரவு 10.30 மணி வாக்கில், கோம்பாக்கில் ஓர் உணவகத்தின் பின்னாலிருந்த ஆற்றின் அருகே D. சரவணன் என்பவரை அடித்துக் கொன்றதாக அந்நால்வரும் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.

அரசு தரப்பின் சாட்சியாக 20 பேர் அழைக்கப்பட்டனர்; சம்பவத்தை நேரில் பார்த்ததாகக் கூறப்படும், கொலையுண்டவரின் 4 நண்பர்களும் அவர்களில் அடங்குவர்.

ஆனால், கொலை நடந்த நேரம், இடம் முதற்கொண்டு கொலைக்கான காரணம் வரை பெரும் முரண்பாடுகள் இருப்பதை நீதிமன்றம் கண்டறிந்தது.

குறிப்பாக, சரவணன் பல்வேறு வெட்டுக் காயங்களால் மரணமடைந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கைத் தெரிவிக்கிறது.

ஆனால், மருத்துவ அறிக்கையோ, இதய செயலிழப்பு மற்றும் சீழ்ப்பிடிப்புக் காரணமாகவே சரவணன் உயிரிழந்ததாகக் கூறுகிறது.

எனவே, தற்காப்பு வாதம் செய்யத் தேவையில்லாமலேயே அந்நால்வரையும் விடுவிப்பதாக நீதிபதி அறிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!