
தானா மேரா, ஜனவரி-26 – சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ-வின் 3 வகையான சம்மன்களைச் செலுத்தாமலிருக்கும் வாகன உரிமையாளர்கள், வரும் ஜூலை தொடங்கி கறுப்புப் பட்டியலிடப்படுவர்.
சம்மன் பாக்கியைச் செலுத்தாத வரை, JPJ-வில் அவர்களால் எந்தவோர் அலுவல்களையும் மேற்கொள்ள முடியாது என, அதன் தலைமை இயக்குநர் Datuk Aedy Fadly Ramli தெரிவித்தார்.
வாகனமோட்டும் உரிமம் மற்றும் சாலை வரியைப் புதுப்பிப்பதும் அவற்றிலடங்கும்.
AwAS சம்மன்கள், Notis Temu Siasat, Notis Saman Tampal ஆகியவையே அம்மூன்று வகையான சம்மன்களாகும்.
சம்மன்களைச் செலுத்தாமலிருப்போருக்கு வாய்ப்பு வழங்கும் பொருட்டே, 150 ரிங்கிட் சிறப்புக் கட்டணக் கழிவுச் சலுகை இம்மாதம் தொடங்கி வழங்கப்படுகிறது.
ஜூன் 30-ஆம் தேதி அச்சலுகை முடிவடைந்த கையோடு, அமுலாக்க நடவடிக்கைத் தொடங்கும் என்றார் அவர்.
அச்சிறப்புக் கழிவுச் சலுகைத் தொடங்கியது முதல் இதுவரை 83,000 சம்மன்களை உட்படுத்திய 12.5 மில்லியன் ரிங்கிட் அபராதத் தொகை வசூலாகியுள்ளது.
JPJ புள்ளிவிவரப்படி, இன்னமும் 2 மில்லியன் சம்மன் தொகைகள் நிலுவையில் உள்ளன.
ஜூன் 30-க்குள் அவை வசூலாகி விடுமென எதிர்பார்ப்பதாக Datuk Aedy சொன்னார்.